சமையல் எரிவாயுவின் விலை, இன்று நள்ளிரவு குறைகிறது

🕔 June 29, 2018

மையல் எரிவாயுவின் விலை, இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை, 138 ரூபாவால் குறைகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவுக்கான விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி  1,431 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவுக்கான விலை, ரூபா  1,676 ஆக அதிகரிக்கப்பட்டது.

ஆயினும், தற்போதைய விலைகுறைப்பின் படி, சமையல் எரிவாயுவின் விலை 1538 ரூபாவாக குறைவடையவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்