ஜும்ஆ பிரசங்கம்; கவனிக்க வேண்டிய தவறுகள்: உள்ளிருந்து ஒரு விமர்சனக் குரல்

🕔 June 29, 2018

– அஸீஸ் நிஸார்டீன் –

கொழும்பு கிறேன்ட்பாஸ் பள்ளிவாசலில் இன்று ஜும்ஆ பிரசங்கம் பொறுக்க முடியாத காது வெடிக்கும் இரைச்சலாக இருந்தது.

ஹஸ்ரத் மூச்சு விடாமல் உச்ச ஸ்தாயியில் இடைவிடாது முழங்கிக்கொண்டிருந்தார். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும் சத்தம் கூட – சூறாவளி இரைச்சல் போல டிஜிட்டல் ஒலி வாங்கியில் மிகவும் துல்லியமாக கேட்டது.

இன்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஒலி ஒளி வசதிகள் இருந்தும் கூட, இன்றைய குத்பா பிரசங்கங்களில் இந்த ‘கத்தல்களுக்கு’ குறைந்தபாடில்லை.

முற்றுப்புள்ளி இல்லாத வசனங்களுடனான – ஏற்ற இறக்கம் இல்லாத ஹஸரத்தின் கடுமையான உயர்ந்த சத்தத்தில், மனது அமைதி இழந்து தவித்தது.

தொழுகை முடிந்தும் நீண்ட நேரம் மஸ்ஜிதில் அமர்ந்து இருந்ததால், இழந்த மன அமைதியை மீண்டும் பெற முடியுமாய் இருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்