பத்திரிகை நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் துயரம்

🕔 June 29, 2018

மெரிக்கா – மேரிலாண்ட் மாநிலம் அனாபோலிஸில் உள்ள ‘கெபிடல் கெசட்’ எனும் பத்திரிகை நிறுவனத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 05 பேர் பலியாகியுள்ளதோடு; மேலும் பலர் காயமடைந்தள்ளனர்.

பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊழியர்களே இதன்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் ஜரோட் வரன் ரமோஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தப் பத்திரிகைக்கு எதிராக 2012ஆம் ஆண்டில் மான நஷ்ட வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்ததாகவும், ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமீப காலத்தில் அந்த பத்திரிகை நிறுவனத்துக்கு சமூக ஊடகங்களில் ‘அச்சுறுத்தல்கள்’ விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இந்தத் தாக்குதலானது செய்தி நிறுவனம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்டவர் பத்திரிகை நிறுவனத்தின் கட்டத்தினுள் துப்பாக்கியுடன் நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் இறுதியில் ஒரு மேசைக்கு அடியில் தாக்குதல்தாரி ஒளிந்திருந்த போது, அவரை தாம் கைது செய்யதாக பொலிஸார் கூறியுள்ளர்.

இதுவேளை, அதிகாரிகளுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க, சந்தேக நபர் மறுப்பதாக அறியவருகிறது.

சம்பவம் நடைபெற்ற கட்டடத்திலிருந்து 170 பேர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டனர்.

இந்த தாக்குதலையடுத்து எச்சரிக்கை நடவடிக்கையாக நியூயோர்க் நகரில் அமைந்துள்ள செய்தி நிறுவனங்களுக்கு பயங்கரவாத தடுப்பு குழுக்களை நிறுத்தியுள்ளதாக அந்த நகர பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்