மாலை நேர வகுப்புகளுக்கு பாடசாலை சீருடையுடன் செல்லவும்: பெண் பிள்ளைகளுக்கு பள்ளிவாசல்கள் சம்மேளனம் அறிவுறுத்தல்

🕔 June 29, 2018

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் பெண் மாணவர்கள், பாடசாலை சீருடையை அணிந்து செல்லுமாறு, அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிணங்க, 06ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவியர்கள், மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் போது பாடசாலை சீருடையை அணியுமாறு அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளதோடு, பெற்றோர் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்காகவும், அனாச்சாரங்களைத் தவிர்ப்பதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஊரிலுள்ள பள்ளிவாசல்கள் மூலமாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்