ஒரு வாரத்தில் 15 மனிதப் படுகொலை; குற்றச் செயல்களில் நாடு உச்சத்தில் உள்ளது
இலங்கையில் ஜூன் 19 முதல் 26 வரையான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம், 15 மனிதப் படுகொலைகள் நடந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேனசிங்க தெரிவித்தார்.
பாதாள உலக கோஷ்டி தொடர்பில் அரசாங்கம் கடைபிடிக்கு நழுவல் போக்கே இதற்கு காரணம் எனவும் அவர் கூறினார்.
ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளாதாக அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் கூறினாலும் மனித படுகொலைகள் , கற்பழிப்பு , போதை பொருள் பாவனை ஆகியவற்றில் இலங்கை முன்னணியில் இருப்பதாக பொலிஸ் மா அதிபரே ஒத்துக்கொள்ளும் அளவுக்கு, நிலமை மோசமடைந்துள்ளாதாகவும் அவர் தெரிவித்தார்.
(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)