கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம்
கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தனக்குமிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது சகோதர் கோட்டாவும், தானும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
“எனக்கும் எனது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையில் நெருக்கடி நிலவுவதாக பிரசாரம் செய்துவருகின்றனர். ஆனால் எனக்கும் எனது சகோதரருக்கும் இடையில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை.
நாங்கள் இருவரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம்.எப்படியிருப்பினும் ஜனாதிபதி தேர்தல் வரும்போது, யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை மஹிந்த ராஜபக்ஷ தீர்மானிப்பார். மஹிந்த ராஜபக்ஷவைத்தான் மக்கள் விரும்புகின்றனர்.
எனவே மஹிந்த ராஜபக்ஷ யாரை களமிறக்குகின்றாரோ, அவர் வேட்பாளராக வருவார். அவரின் வெற்றிக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
எனக்கும் சகோதரர் கோட்டாவுக்கும் இடையில் எந்தப்பிரச்சினையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையுடனும் செயற்பட்டு வருகின்றோம்” என்றார்.