நாளாந்தம் 23 வீதி விபத்துக்கள்; வருடத்துக்கு 03 ஆயிரம் பேர் பலி: இலங்கையின் மரணக் கணக்கு
நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 23 வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு பணிப்பாளர் டொக்டர் திலக் ஸ்ரீவர்த்தன தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்கள் மூலம் வருடத்துக்கு சுமார்03 ஆயிரம் பேர் மரணமடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு வீதி விபத்துக்களில் 3,111 பேர் பலியாகினர் என்றும், இந்த வருடம் இதுவரையில் 1459 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி விபத்துக்களில் பாதிக்கப்படுகின்றவர்களில் அதிகமானோர் 14 தொடக்கம் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.