நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்
– அஹமட் –
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவொன்றுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை – ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதோடு, கடையடைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள – ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை விடுவிக்குமாறு கோரியே, மேற்படி குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம் வழங்கிய உத்தரவொன்றுக்கு எதிரக, குறிப்பிட்ட நபரை விடுவிக்க வேண்டுமென நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது, நீதித்துறையை மலினப்படுத்தும் விதமானதாக அமைந்திருந்தது என்று, அங்கிருந்தோர் தெரிவித்தனர்.
இதேவேளை, நீதிமன்றமொன்று வழங்கிய உத்தரவு தொடர்பில் மாற்றுக் கருத்து இருக்குமாயின், அதனை நீதிமன்றத்தினூடாக மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்பான செய்தி: முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு