முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

🕔 June 20, 2018

லயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளர் க.பேரின்பராசாவை எதிர்வரும் 26ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நீதிபதி பீற்றர் போல் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் 06 முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தவிசாளரை அக்ரைப்பற்றுப் பொலிசார் கைது செய்து, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

முஸ்லிம்கள் மீதான மேற்படி தாக்குதலுடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டில் தவிசாளர் பேரின்பராசாவையும், ஏனைய சிலரையும் கைது செய்யும்பொருட்டு, நீதிமன்றின் அனுமதியை பொலிஸார் நேற்று கோரியிருந்தனர்.

இதற்கமைய வழங்கப்பட்ட  பிடியாணை உத்தரவுக்கு அமைவாகவே, ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டார்.

தொடர்பான செய்தி: அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்