நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன்: சுஜீவ சேனசிங்க

🕔 June 12, 2018

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கோரும் பட்சத்தில் அதனைச் செய்வேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று கலந்து கொண்ட போதே ராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட விவகாரம் தொடர்பில், குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட போதே சுஜீவ சேனசிங்க இவ்வாறு கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்