இலங்கையின் 20 ஆவது சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு

🕔 September 1, 2015

Karu jayasuriya - 01புதிய நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. இன்போது முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.

புதிய நாடாளுமன்றின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டார். இவரை பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிய, ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமர் சிலபால டி சில்வா வழிமொழிந்தார்.

சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட, தேசபந்து கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் 20ஆவது சபாநாயகராவார்.

29 செப்டம்பர் 1940ஆம் ஆண்டு பிறந்த கரு ஜயசூரிய, 1965ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தராக பணிபுரிந்தார்.

பின்னர், 1997ஆம் ஆண்டு – முதல் தடவையாக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளுடன் கொழும்பு மாவட்ட மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.

பின்னர், கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, அதிக வாக்குகளுடன் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவதப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

தொடர்ந்து 2001ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றியடைந்து, மின்சக்தி எரிசக்தி அமைச்சரானார்.

இடையில், மஹிந்த ராஜபக்ஷ அராசங்கத்துடன் இணைந்து கொண்டபோதிலும், கட்சி 2008ஆம் ஆண்டு ஐ.தே.கவில் மீண்டும் இணைந்து, பல அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தார்.

இவ்வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக – கரு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஆட்சிக் காலத்தில் – கரு ஜயசூரிய, ஜேர்மன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்