பஷில் தொடர்ந்தும் ‘உள்ளே’

🕔 May 27, 2015

Basil - 01முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை  ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான் தம்மிக்க ஹேமபால இன்று உத்தரவிட்டார்.

பசில் ராஜபக்ஷவின் வழக்கு   இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பசில் ராஜபக்வை பிணையில் விடுவிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை நிராகரித்த  நீதவான் – அவரை எதிர்வரும் ஜுன் மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

திவி நெகும நிதியை மோசடி செய்ததாக தெரிவித்து,  பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் மீது வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி, முன்னாள் அமைச்சர் பஷில் கைது செய்யப்பட்டார்.

Comments