சு.கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மைத்திரிக்கு; மத்திய குழுவில் முடிவு

🕔 August 28, 2015

Maitripala - 086தேசிய அரசாங்கத்தில் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பது மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிவு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரத்தினை, அந்தக் கட்சியின் தலைவர் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை அந்தக் கட்சியின் மத்திய குழு கூடியது.

இதன்போது,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் – யார் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் தீர்மானத்தினை எடுக்கும் அதிகாரத்தினை, கட்சியின் தலைவருக்கு மத்திய குழு வழங்கியது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம், பிரதம எதிர்க்கட்சிக் கொறடா  மற்றும் பிரதி சபாநாயகர் ஆகிய பதவிகளுக்கான நபர்களை தெரிவு செய்யும் அதிகாரத்தினையும், மத்திய குழுவினர் கட்சியின் தலைவர் மைத்திரிக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்