இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம்

🕔 August 28, 2015

Hangmen - 01சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவுகின்ற இரண்டு அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிகளுக்கான வெற்றிடங்களுக்காக, 13 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, சிறைச்சாலை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து தெரிவித்தார்.

சிறைச்சாலை திணைக்களத்தில் காணப்படும் இரு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பம் பொருட்டு, நீதியமைச்சின் அனுமதியுடன் கடந்த மாதம் விண்ணப்பங்களைக் கோரி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பில், உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து மேலும் தெரிவிக்கையில்; “தற்போது கிடைத்துள்ள 13 விண்ணப்பதாரிகளில் தகைமையுடைய இருவர் தெரிவு செய்யப்பட்டு, எதிர்வரும் நொவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில், அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படும். மேலும், தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு, கடமை தொடர்பில் இரண்டு வாரங்கள் பயிற்சி வழக்கப்படும்” என்றார்.

அலுகோசு பதவிகளுக்கு ஏற்கனவே இரண்டு பேர் நியமிக்கப்பட்ட போதிலும்,  பயிற்சிக் காலத்தின்போது, அவர்கள் விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்