சொந்தப் பிள்ளைகளுக்கு ‘ப்ளு ஃபில்ம்’ காட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையர்கள்; நுவரெலியாவில் கைது

🕔 May 4, 2018

மது பெண் பிள்ளைகள் இருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையர்கள் இருவரை நுவரெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இதற்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் மேலும் இருவரிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலை மாணவிகளான 14, 15, 16 வயதுகளையுடைய சிறுமிகளுக்கு ஆபாச படங்களைக் காண்பித்து, அவர்களை சொந்த தந்தையர்களே பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர்.

தொடர்ச்சியாக நீடித்து வந்த தந்தையர்களின் கொடூர செயலினால், உள மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் திடீர் என தீர்மானம் ஒன்றினை எடுத்தனர்.

தந்தையர்களுடன் தொடர்ந்து இருந்தால், மேலும் ஆபத்தினை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனப் பயந்து, வீட்டுக்குத் தெரியாமல் கொழும்புக்குத் தப்பி வந்துள்ளனர்.

கொழும்புக்கு வந்த சிறுமிகள் எங்கு செல்வது, என தெரியாது தடுமாறிக் கொண்டிருந்தமையைக் கண்ட பொலிஸார் அவர்களை நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

சிங்கள மொழி தெரியாததால் பொலிஸாரின் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. இதனையடுத்து சிறுமிகளை தனியே ஓர் அறையில் பொலிஸார் தங்கவைத்துள்ளனர்.

அதேவேளை சிறுமிகள் தங்க வைக்கப்பட்ட அறையில் சி.சி.ரி.வி. கெமரா மற்றும் குரல் பதிவு செய்யும் கருவிகளையும் பொலிஸார் பொருத்தினர்.

இதனையடுத்து சிறுமிகள் உரையாடுவதனை பதிவு செய்து கொண்ட பொலிஸார், அதனை செவியுற்ற போதே தந்தையர்களிடம் பாலியல் துன்பங்களை அனுபவித்த விடயம் அம்பலமாகியது.

இந்நிலையில், நுவரெலியா பொலிஸாருக்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்டு தந்தையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு உடந்தையாக செயற்பட்ட தாய் மற்றும் மேலும் இருவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் குறித்த தந்தையர்களுக்கு ப்ளு ஃபில்ம் (ஆபாச படம்) சீ.டி.களை வழங்கிய தோட்ட காவலாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்