ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு வாக்கெடுப்பு மூலம் நபர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்: அமைச்சர் இரான்

🕔 April 28, 2018

க்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி உள்ளிட்ட அனைத்து முக்கிய பொறுப்புக்களுக்குமான நபர்கள், வாக்கெடுப்புகள் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டுமென நிதி ராஜாங்க அமைச்சர் இரரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

“பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, அவர் இதனைக் கூறினார்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மறுசீரமைப்பு ஒன்றினை மேற்கொள்ள வேண்டுமென்பதை, எமது வாக்களர்கள் கட்சிக்குப் புரிய வைத்துள்ளனர்.

மேலும், கட்சியின் முக்கிய பதவிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய மாற்றங்களை, கட்சி வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்களாக என்கிற கேள்வியும் உள்ளது” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்