மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவுகள்; கல்முனையில் அங்குரார்ப்பணம்

🕔 April 28, 2018

– எஸ்.எல்.அப்துல் அஸீஸ் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 16, 17ஆம் வட்டாரங்களுக்கான மகளிர் பிரிவுகளின் அங்குரார்ப்பணம் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப்பின் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அங்கத்தவர்களாக நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள்  இணைந்து கொண்டனர். குறித்த அங்கத்தவர்களின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்,  கட்சியின் கல்முனை தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளர்  எம்.எம். ஜுனைடீன்,   கட்சி செயற்பாட்டாளர்களான ஐ.எம். பாருக், எஸ் .எச். நிஹார், கே. நபீரா உட்பட  கட்சி  சார் பலரும் கலந்துகொண்டனர்.

Comments