கோளாவில் மாணவர்கள் அமைதிப் பேரணி

🕔 May 27, 2015

கண்டனம் - 01– வி.சுகிர்தகுமார் –

மாணவி வித்தியாவின் கொலையினைக் கண்டித்து  கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய மாணவர்கள் அமைதிப் பேரணியொன்றில் ஈடுபட்டனர்.  பாடசாலையில் இருந்து ஆரம்பமான மேற்படி பேரணியானது, சாகாம வீதியூடாக சந்தை சதுக்கத்தை அடைந்து – மீண்டும் பாடசாலையைச் சென்றடைந்தது.

இதேவேளை, வித்தியாவின் படுகொலையைக் கண்டிக்கும் வகையில், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு  பிரதேசங்களில் கடையடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆயினும்,   அரச அலுவலக செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்றதோடு, பாடசாலைகளும் இயங்கின.

நேற்றைய தினம், மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டிக்கும் முகமாக, இப்பிரதேசங்களில்  துண்டுபிரசுரம் மூலம் – ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கண்டனம் - 04

கண்டனம் - 03

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்