06 அமைச்சர்கள் எதிரணிக்கு வருகிறார்கள்: 19ஆம் திகதி நடக்கும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

🕔 April 11, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவுள்ளனர் என்று, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும், மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தின்  அடுத்த அமர்வின்போது எதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி அவர்கள் தங்கள் பதவிகளை துறந்துவிட்டு ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அரசாங்கத்தில் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்கான தீவிர முயற்சிகள் இடம்பெறுகின்றன  எனவும் மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்