மொட்டு வசமானது கோட்டே ; மதுர விதானகே மேயரானார்

🕔 April 2, 2018

ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டே மாநகரசபையினை தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியுள்ளது.

மேற்படி சபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோது, அச் சபைக்கான மேயர் தெரிவு திறந்த வாக்களிப்பு மூலம் நடத்தப்பட்டது.

இதன்போது, பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே 23 வாக்குகளைப் பெற்று மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மேயர் பதவிக்காக போட்டியிட்ட சந்திம நயனஜீவ 11 வாக்குகளை இதன்போது பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டே மாநகரசபையின் பிரதி மேயராக பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த பிரேமலால் அத்துக்கொரல தெரிவானார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்