புதிய பீடாதிபதியானார் குணபாலன்
– பி. முஹாஜிரீன் –
தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி எஸ். குணபாலன் தெரிவாகியுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உப வேந்தர் கலாநிதி எஸ்.எம். எம். இஸ்மாயில் தலைமையில் புதிய பீடாதிபதி தெரிவு இடம்பெற்றது. இதன்போது கலாநிதி எஸ். குணபாலன் கூடுதலான வாக்குகளைப் பெற்று – புதிய பீடாதிபதியாகத் தெரிவானார்.
வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி எஸ். குணபாலன், முகாமைத்துவ பீட தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.