50 அடி பள்ளத்தில், பஸ் வீழ்ந்து விபத்து; 13 பேர் வைத்தியசாலையில்

🕔 August 22, 2015

Accident - Hatton - 09
ற்றன் – கொழும்பு பிரதான வீதி, செனன் வூட்லேண்ட் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி – சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து, விபத்துக்கு உள்ளானதில், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹொரணையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே, இன்று காலை மேற்படி பஸ் விபத்துக்குள்ளானது.

இதன்போது, பஸ்ஸில் பயணித்த 30 பேரில் 13 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், காயப்பட்டவர்களில்  இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக, நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Accident - Hatton - 07Accident - Hatton - 06
Accident - Hatton - 10

Comments

புதிது பேஸ்புக் பக்கம்