சமூக வலைத்தளங்கள் மீதான தடை; நீக்குவதா, நீடிப்பதா: ஜனாதிபதி இன்று அறிவிப்பார்

🕔 March 13, 2018

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்கிழமை முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி, இலங்கையின் நடப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் முக்கிய தீர்மானத்தை எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவருக்கு தனது தீர்மானத்தை, ஜனாதிபதி இன்று மாலை அறியப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமையவே, சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்