ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப்பட்டியல் நியமனம் அறிவிக்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் மகிழ்ச்சி ஆரவாரம்

🕔 August 21, 2015
Hisbullah - 099
– பழுலுல்லாஹ் பர்ஹான் –

முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து, ஹிஸ்புல்லாஹ்வின் சொந்த ஊரான காத்தான்குடி பிரதேசத்தில், அவரின் ஆதரவாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் பிரதியமைச்சர், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று மாலை அறிவிக்கப்பட்டார்.

இதனையறிந்த காத்தான்குடியிலுள்ள ஆதரவாளர்கள், பட்டாசு கொழுத்தி மகிழ்ந்ததோடு, வாகன ஊர்வலமாகவும் சென்றனர்.

இதனால் சிறிது நேரம், காத்தான்குடி பிரதான வீதியல் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்த நிலையில், பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
Hisbullah - 098
Hisbullah - 092Hisbullah - 095

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்