தோற்றுப் போனவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை; ரணில் அறிவிப்பு
பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த எவருக்கும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என, ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐதே.கட்சிக்கு 13 தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைந்துள்ள நிலையிலேயே, ஐ.தே.க. தலைவர் இந்த அதிரடி முடிவினை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கானவர்களின் பெயர் பட்டியல், நாளை வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.