ரணிலும் கருவும் மைத்திரியை சந்திக்கின்றனர்

🕔 February 18, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.

இதன்போது தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் முடிவொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளைய தினம் ஒன்றிணைந்த எதிரணியினர் கூடிப் பேசவுள்ளனர்.

இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்