ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அரசாங்கம் தடை

🕔 August 20, 2015

Private classes - Bannedந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக கருத்தரங்குகள், வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் போன்றவற்றினை நடத்துவதற்கு, இன்று வியாழக்கிழமை முதல், தடைவிதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த மாதம் 23ஆம் திகதி, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி தடையுத்தரவினை மீயும் வகையில் செயற்பாடுகள் இடம்பெறுமாயின், அவை தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு முறையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் அவரச தொலை பேசி இலக்கமான 1911 க்கு அல்லது திணைக்களத்தின் 0112 78 42 08 எனும் தொலைபேசி இலக்கத்தினைத் தொடர்பு கொண்டு முறைப்பாடுளை தெரிவிக்க முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்