லசந்த கொலை தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

🕔 February 14, 2018

டகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில், ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளைக்கு அமைவாக, அப்போது மேல் மாகாணம் தென் பிரிவு, கல்கிஸ்ஸை பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்த, ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை இரவு கைது செய்யப்பட்ட அவர், இன்றைய தினம் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி, கல்கிஸ்சை, அத்திடிய பகுதியிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து, காரில் பயணிக்கும் போது தாக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்