அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்தில், யானை வெற்றி; தமீம் ஆப்தீன் உறுப்பினராகிறார்

🕔 February 10, 2018

– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பின் படி, அறபா வட்டாரத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக, உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் யானைச் சின்னத்துக்கு 1516 வாக்குகளும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்துக்கு 501 வாக்குகளும், தேசிய காங்கிரசின் குதிரைச் சின்னத்துக்கு 386 வாக்குகளும் கிடைத்துள்ளன.

அதேவேளை, அறபா வட்டாரத்தின் 01, 10 மற்றும் 08 ஆகிய அனைத்து பிரிவுகளிலும் யானைச் சின்னத்துக்கே பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன. தபால்மூல வாக்கிலும் யானைச் சின்னத்துக்கே அதிக வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்தில் யானைச் சின்ன வேட்பாளர் தமீம் ஆப்தீன் வெற்றி பெற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்