குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள்

🕔 August 19, 2015

Sivajilingam - 08டைபெற்ற பொதுத் தேர்தலில் – குருணாகல் மாவட்டத்தில், சுயேற்சைக் குழு சார்வில் போட்டியிட்ட வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், 91 விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

ஆயினும்,  தனது முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிர்ப்பினை வெளிக்காட்டுவதற்காவே,  குருணாகல் மாவட்டத்தில் – தான் போட்டியிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தத் தேர்தலில், வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கையில் – தான் போட்டியிடவில்லை என்றும், தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் – தனது நிலைப்பாட்டை முன்வைப்பதற்காகவே, இந்தத் தேர்தலில் – தான் போட்டியிட்டதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்