ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் தொடர்பில், பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த, மஸ்தான் எம்.பி.யை, விவாதத்துக்கு வருமாறு அழைப்பு

🕔 February 6, 2018

ன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானும், அவரின் ஆதரவாளரான மௌலவி முனாஜித்தும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டுமெனவும், அவர்கள் இருவரையும் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் வட மாகாண மஜ்லிஸுஸ் ஷூராவின் தலைவர் அஷ்ரப் முபாரக் மௌலவி அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னார், காக்கையன்குளச் சந்தியில் இன்று செய்வாய்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே, அவர் இந்த அழைப்பினை விடுத்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றத் துடிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கைகளைக் கட்டிப்போடுவதன் மூலம், வன்னி மாவட்டத்தில் – தான் மட்டுமே அரசியல் பிழைப்பு நடத்த முடியுமென கனவு காணும் மஸ்தான் எம்.பியும், அவருக்கு சாமரம் வீசிவரும் முனாஜித் மௌலவியும் மக்களை பிழையாக வழிநடாத்த முயற்சிக்கின்றனர்.

அத்துடன், ஜனாதிபதியிடமிருந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தூரப்படுத்த முடியுமென எண்ணுகின்றனர். அரசியல் கூட்டமொன்றில் அநாகரீகமாக, அமைச்சர் தொடர்பில் கோழ் மூட்டும் இவர்கள், அரசியல் கத்துக்குட்டிகளாகவே இன்னும் இருப்பது வேதனையானது.

வன்னியில் அபிவிருத்தி என்றால், அங்கே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மட்டும்தான் என்று இந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் முடிவு செய்துள்ள நிலையில், அமைச்சர் ‘தான் சார்ந்த கட்சிக்கும், தனது சமூகத்துக்கும் மாத்திரமே பணிபுரிகின்றார்’ என்ற இவர்களின் குற்றச்சாட்டு நகைப்புக்கிடமானது.

வன்னியில் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிகளை இவர்கள் மறைக்கப் பார்ப்பதுடன், அவரின் சில அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கு இவர்கள் உரிமை கோரும் நிலையும் கேவலமானது. கடந்த தேர்தலில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் வாக்குகளுடன், இந்த வன்னி மாவட்டத்திலேயே அதிகூடிய வாக்குகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெற்றமைக்கு, அவரின் இன, மத பேதமற்ற செயற்பாடுகள் சான்றாகும்.

அமைச்சர் ரிஷாட் எச்சசொச்ச வாக்குகளினால் நாடாளுமன் உறுப்பினர் பதவியைப் பெற்றவில்லை. தொடர்ச்சியாக நான்கு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, சுமார் 16 வருடகாலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றுகின்றார். அத்துடன் வடக்கிலே அமைச்சரவை அந்தஸ்தைப் பெற்ற ஒரேயொரு அமைச்சராகவும் அவர் உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா மற்றும் மஹிந்தவை நாட்டுத் தலைவர்களாக்கியதில் அமைச்சர் ரிஷாட்டின் பங்களிப்பு முக்கியமானது. அதேபோன்று, மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி, இதே ஜனாதிபதி மைத்திரியை ஆட்சிக்குக் கொண்டு வந்ததிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முதன்மையானவர் என்பதையும் இவர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த யதார்த்தத்தை நேற்று திங்கட்கிழமை சிலாவத்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் என்பதை அமைச்சர் ரிஷாட் மீது குற்றஞ்சாட்டுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மீள்குடியேற்றத்தைத் தடுத்து இனவாதிகளிடமும், மீள்குடியேற்றத்தை விரும்பாத சக்திகளிடமும் நல்ல பெயரை பெற்றுக்கொள்வதற்காகவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குரல்வளையை இவர்கள் நசுக்கப் பார்க்கின்றனர்.

இவர்களால் வன்னி மக்களின் விடிவுக்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைப் போன்று, தன்னந்தனியனாக நின்று ஏதாவதொரு அபிவிருத்தித் திட்டத்தைக் கொண்டுவர முடியுமா? எனவும் சவால் விடுகின்றேன்” என்றார்.       

Comments

புதிது பேஸ்புக் பக்கம்