ஐந்து வருடங்களில், அதாஉல்லாவின் விருப்பு வாக்கு, 20 ஆயிரத்தால் வீழ்ச்சி

🕔 August 19, 2015

 

Athaulla - 021– முன்ஸிப் –

ம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா 16,771 விருப்பு வாக்குகளையே பெற்றுள்ளார்.

கடந்த 2010 ஆண்டு பொதுத் தேர்தலில், இவர் 36,643 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐ.ம.சு.முன்னணி வேட்பாளர்களில் இரண்டாவது ஆகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் இம்முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிறியானி விஜேவிக்கிரமவை விடவும் 197 விருப்பு வாக்குகளைக் குறைவாகப் பெற்றமையினால், அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர தோல்வியடைந்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் முழு விபரம் வருமாறு;
(தெரிவு செய்யப்பட்டவர்கள் சிவப்பு பெட்டியினால் அடையாளமிடப்பட்டுள்ளனர்)Result - 098

 

Comments