வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம்

🕔 January 30, 2018
 ன்னியில் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்றும் அவர் கூறினார்.

மன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்;

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அடையாளம் பெற்ற வன்னி அமைச்சருக்கு, மர்ஹூம் நூர்தீன் மசூர் சிபார்சு செய்திருக்காவிட்டால், வன்னி அமைச்சருக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்திருக்காது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடையாளம் பெற்றிருக்காவிட்டால், அவர் இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டார். ஆனால், இன்று அவற்றையெல்லாம் மறந்து காட்டுத்தர்பார் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்.

முசலி பிரதேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கான சாதக நிலைமைகள் காணப்படுகின்றன. அராஜக அரசியல் செய்துகொண்டிருக்கும் வன்னி அமைச்சருக்கு எதிரான தீர்வை எடுப்பதற்கு மக்கள் துணிந்துவிட்டார்கள். இந்நிலையில், முசலி பிரதேச சபையை கைப்பற்றும் நோக்கில், எமது வட மாகாண சபை உறுப்பினர் றயீஸ் தானக முன்வந்து பதவியை ராஜினாமா செய்து பாரிய தியாகத்தை செய்துள்ளார்.

அரச வேலைவாய்ப்புகள் வழங்குகின்றபோது, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் புறக்கணிப்படும் குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்துவருகிறது. அதனை நிவர்த்திக்கின்ற முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதுதவிர, எருக்கலம்பிட்டியில் இறங்குதுறை ஒன்றை அமைத்து தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சரை சந்தித்து அதனை செய்வதற்கான முயற்சியையும் நாங்கள் மேற்கொள்வோம்” என்றார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்