இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த 12 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல்காரர்களும் கைது

🕔 January 29, 2018

ந்தியாவுக்கு கடல் வழியாக 12 கிலோகிராம் தங்கத்தை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது.

உறுமலை கடற்பகுதியில், படகு ஒன்றில் மேற்படி தங்கத்தினை கடத்த முற்பட்ட இலங்கையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதோடு, கடத்த முயற்சித்த தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒவ்வொன்றும் 100 கிராம் எடையுடைய 120 கட்டிகள், மேற்படி படகிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 07 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடற்படையினருக்குக் கிடைத்த தகவலொன்றினை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே, கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மாகாண சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுளனர். அதேவேளை, கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் படகு ஆகியவையும் அங்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்