கை, சேவலுக்கு ஆதரவு வேண்டி, தலவாக்கலை கூட்டத்தில் ஜனாதிபதி; பெருந்தொகை மக்கள் பங்கேற்பு

🕔 January 28, 2018

– க. கிஷாந்தன் –

னாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை, தலவாக்கலை விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கை மற்றும் சேவல் சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, எஸ்.பீ. திஸாநாயக்க, இ.தொ.கா. பிரதி தலைவர் அம்மாவாசை ராமையா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஊவா மாகாண மற்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான செந்தில் தொண்டமான், மருதபாண்டி ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், பிரபா கணேசன் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் மிகப் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்