பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 38 பேர் கையெழுத்து; கம்மன்பில தகவல்

🕔 January 20, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்கும் பணி, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முன்னுக்குப் பின், முரணான தகவல்களை நாடாளுமன்றில் பிரதமர் முன்வைத்தமை தொடர்பிலும் மேற்படி நம்பிக்கையில்லாா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்