அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும் வெற்றி

🕔 August 18, 2015

SLMC - 034ம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட மு.காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும் வெற்றியீட்டியுள்ளனனர்.

அந்தவகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

ஐ.தே.கட்சி சார்பாக, அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே வெற்றி பெற்றுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சிக்கு 04 ஆசனங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்