வரவு – செலவுத் திட்டமானது, முற்போக்கானதோர் அணுகுமுறையாகும்: மு.கா. தலைவர் புகழாரம்

🕔 November 10, 2017

ரசாங்கம் முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டமானது முற்போக்கானதோர் அணுகுமுறை என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சூழலைப் பாதுகாப்பதையும், இயற்கைப் பேரழிவுகளைத் தடுப்பதையும் மற்றும் பொதுமக்களிடையே தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதையும், இந்த வரவு – செலவுத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், எதனைச் சாதிக்க வேண்டும் என்கிற முழுமையான பார்வையினை இந்த வரவு – செலவுத் திட்டம் கொண்டுள்ளது எனவும் ஹக்கீம் குறிப்பிட்டார்.

அதேவேளை, மக்கள் மீது சுமையேற்றாமல் பல்வேறு முன்மொழிவுகளை இந்த வரவு – செலவுத் திட்டம் முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்