மரண வீட்டுக்கு லொறியில் சென்றோர் விபத்து; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

🕔 November 8, 2017

– க. கிஷாந்தன் –

லொறியொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 11 பேர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேற்படி லொறி, ஹட்டன் – வெளிஓயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியின் தடுப்பு கட்டையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக விபத்தில் காயமடைந்த சாரதி தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் அனைவரும் ஆண்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்