மதுரங்குளியில் பஸ் விபத்து; ஐவர் பலி, 44 பேர் காயம்

🕔 November 6, 2017

துரங்குளிப் பகுதியில் பஸ் ஒன்று புரண்டு விபத்துக்குள்ளானதில் 05 பேர் பலியானதோடு, 44 பேர் படு காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் புத்தளம், சிலாபம் மற்றும் மதுரங்குளி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முச்சக்கர வண்டியொன்றினை குறித்த பஸ் வண்டி முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்