பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டது பஸ்; 25 பேர் படுகாயம்

🕔 November 5, 2017

– க. கிஷாந்தன் –

லங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ் ஒன்று டயகம – ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி. தோட்டப் பகுதியிலுள்ள பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டு விபத்துக்குள்ளானதால், அதில் பயணித்த 25 பேர், படு காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.

டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹட்டன் பகுதிக்கு சென்று கொண்டிருந்த குறித்த பஸ்,  பாதையை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 25 பேர் படுங்காயங்களுக்கு உள்ளாகினர்.

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 25 பேரில் 4 பேர் பேராதெனிய வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளனர். ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்