சட்டவிரோத மதுபான பாவனை, 40 வீதத்தினால் அதிகரிப்பு; 06 மாவட்டங்கள் முன்னிலையில்

🕔 November 2, 2017

ட்ட விரோத மதுபான பாவனை, இலங்கையில் 30 தொடக்கம் 40 வீதம் வரை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பொன்றில் தெரியவருகிறது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் பிரிவு நடத்திய கணக்கெடுப்பு ஒன்றிலே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மதுபானச் சந்தையில் 49 வீதமானவை சட்டவிரோத மதுபானமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

அந்த வகையயில் நுவரெலியா, புத்தளம், கேகாலை, மொனராகல, பதுளை மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவு சட்ட விரோத மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் நுகரப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்