மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவினை, குரல்கள் இயக்கம் சமர்ப்பிப்பு

🕔 November 1, 2017
மாகாண சபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவுகள் சம்பந்தமாக குரல்கள் இயக்கம் நிறைவு செய்த இறுதி அறிக்கை, இயக்கத்தின் உறுப்பினர்ளாகளால் இன்று புதன்கிழமை எல்லை வரைபு ஆணைக்குழுவின் செயலாளர் சமன் ரத்நாயக்கவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

மாகாண சபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய  எழுத்து மூல முன்மொழிவுகளை, சிவில் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் நொவம்பர்  இரண்டாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு எல்லை நிர்ணய ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தது.

ஒரு சிவில் அமைப்பு  என்ற ரீதியில் குரல்கள் இயக்கத்தின் 15 பேர் கொண்ட ஆய்வுக்குழு இது சம்பந்தமான ஆய்வில் ஈடுபட்டு, குறிப்பாக முஸ்லீம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் மாகாண சபைகளுக்கான பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாதவாறு எவ்வாறு எல்லை நிர்ணயம் செய்ய முடியும் என்பது சம்பந்தமான முன்மொழிவுகளை அறிக்கையாகத் தயாரித்திருந்தது.

இறுதி அறிக்கையை செயலாளரிடம் குரல்கள் இயக்கத்தின் உறுப்பினர்களான ஆய்வாளர் தில்ஷான் முஹம்மட், ஊடகவியலாளர் றிஸ்வான் சேகு முஹைதீன், சட்டத்தரணி முஹைமின் காலித், சட்டத்தரணி அஷார் லதீப் மற்றும் சட்டத்தரணி றதீப் அஹ்மத் ஆகியோர் ஒன்றிணைந்து கையளித்தனர்.

குரல்கள் இயக்கத்தின் எல்லை நிர்ணய அறிக்கையில் குரிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளின் பிரகாரம் எல்லை நிர்ணயங்கள் செய்யப்படுவதற்கு அனைத்து முஸ்லிம் சிவில் அமைப்புகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், பாதிக்கப்படும் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகப் பாதுக்காக்க முடியும் என்று குரல்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்