உள்ளுராட்சி தேர்தலுக்கான காலத்தை, மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டார்
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்தக் காலப்பகுதிக்கும் வரும் ஞாயிறு தினத்திலோ அல்லது பொது விடுமுறை தினங்களிலோ தேர்தல் நடைபெறாது எனவும் அவர் கூறினார்.
புதிய தேர்தல் முறைமைக்கு அமைய நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை, அவற்றில் போட்டியிடவுள்ள அபேட்சகர்களின் தொகையினை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலில், உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் இன்று கையெழுத்திட்டார்.
இதனையடுத்தே, தேர்தல் பற்றிய அறிவிப்பினை ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டார்.