ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம்
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் திவுலுபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இவர் அரசாங்கத்தை விமர்சித்து வந்த நிலையிலேயே, இவரின் அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திவுலுபிட்டிய தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக இன்று திங்கட்கிழமை 35 பேர் நியமிக்கப்பட்டனர்.
ரத்மலான தொகுதி அமைப்பாளராக ஹிருணிகா பிரேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.