கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணதுங்க நியமனம்

🕔 October 25, 2017

லங்கை கடற்படையின் தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாளை வியாழக்கிழமை அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டராவிட் சின்னையாவுக்கு கடந்த செப்டம்பர் 26ஆம் திகதியுடன் 55 வயதானமையினை அடுத்து, அவர் ஓய்வு பெறும் நிலையினை அடைந்தார்.

இந்த நிலையில், கடற்படைத் தளபதி சின்னையாவின் பதவிக் காலத்தை, ஒரு மாத காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதி நீடித்தார்.

இதற்கமைய, தற்போதைய கடற்படைத் தளபதியின் பதவிக் காலம், நாளைய தினத்துடன் நிறைவடைகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்