கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள்

🕔 August 7, 2015

NHDA - 01– அஸ்ரப் ஏ. சமத் –

கொ
ழும்பு நகரில், அடுத்த 05 ஆண்டுகளுக்குள் 75 ஆயிரம் வீடுகள் நிரமாணிக்கப்பட்டு, வீடில்லாத குடும்பங்களுக்கு அவ் வீடுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு நகரை அழகுபடுத்தல் என்ற திட்டத்தின் கீழ், கடந்த ஆட்சிக் காலத்தில் வீடுகளை இந்தோருக்கும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கும் – இவ்வாறான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை (NHDA)   வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே, இது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அடுத்த ஆண்டுக்கான வீடமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில், கொழும்பிலுள்ளவர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீா்வு வகுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரத்துக்குட்பட்ட பிரதேசங்களில், வீட்டுரிமைப் பத்திரமின்றி வாழும் குடும்பங்களுக்கு, அடுத்த வருடத்திற்குள் வீட்டுரிமைப் பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கிணங்க, கொழும்பு நகர அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ், மேற்படி  சகல அபிவிருத்திகளும்  முன்னெடுக்கப் படவுள்ளன.

கொழும்பில் வீடுகளற்ற மக்களுக்கு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் வகுப்பட்டுள்ளன. இது தொடர்பில், வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச – சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளாா்.

இந்த திட்டத்தில், கொழும்பு நகரில் 300 ஏக்காில், வீடுகள் அபிவிருத்தி செய்யப்பட்டு,  173 வீடமைப்புத் திட்டங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.  இதில் 20 ஆயிரத்து 121 வீடுகள் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 32 திட்டங்களில், 1756 பேருக்கு வீட்டுரிமைப்பத்திரம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில், கொழும்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 02 போ்ச் காணி வழங்கப்பட்டு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டன. இவ்வாறான 108 வீடமைப்புத் தொகுதிகள் உள்ளன. இதில் 18,822 குடும்பங்கள் இதுவரை வீட்டுரிமைப் பத்திரம் இல்லாது வாழ்ந்து வருகின்றன. இவா்களுக்கும் வீட்டுரிமைப் பத்திரம் வழங்குவதற்கு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு நகரில் சட்டவிரேத குடியிருப்புக்களை அகற்றி, அவா்களுக்கு சகல வசதிகளும் கொண்ட வீடுகள், வீட்டுரிமை பத்திரம் வழங்கி – அவா்களை அப்பிரதேசத்திலேயே குடியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.  இத்திட்டத்தினால் 20 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைய உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்