சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பில் நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்’ நூல் வெளியீடு

🕔 October 19, 2017

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் –

சாய்ந்தமருது எம்.எம்.எம். நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்: சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை’ எனும் நூல், சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.

மருதம் கலை இலக்கிய வட்டம் வெளியிட்ட மேற்படி நூலின் வெளியீட்டு நிகழ்வுக்கு டொக்டர் என். ஆரீப் தலைமை தாங்கினார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ. முகம்மட் சதாத் சிறப்புரை நிகழ்த்தினார்.

சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி சபை கோரிக்கையில் உள்ள நியாயங்களை நிகழ்வில் உரையாற்றியோர் விளக்கியதோடு, உள்ளுராட்சி சபை கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், அப்பிரதேச ஊர் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர்.

நூலின் பிரதிகளை கல்முனை சட்டத்தரணிகள் சங்க பொருளாளர் ஏ.எல்.எம். றியாஸ் மற்றும் எம்.எச்.எம். இப்ராஹிம் ஆகியோர் பெற்றுக்கொள்ள, நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் குறித்த நூல், இலவசமாக வழங்கப்பட்டன.

இதன்போது, நூலாசிரியர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்