அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினருக்கு, இடைக்கால அறிக்கை தொடர்பில் முழுநாள் கருத்தரங்கு

🕔 October 15, 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: கஜதீபன் –

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை ஏற்பாடு செய்த – முழு நாள் கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை, நிந்தவூர் ஈ.எப்.சி. உணவகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உறுப்பினர்களுக்கு, புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில், இந்தக் கருத்தரங்கில் விளக்கமளிக்கப்பட்டதோடு, இடைக்கால அறிக்கை தொடர்பான ஊடகவியலாளர்களின் சந்தேகங்களும் தெளிவுபடுத்தப்பட்டன.

அரசியல் ஆய்வாளரும், அரசியலமைப்பு தொடர்பில் நிபுணத்துவம் கொண்டவருமான வை.எல்.எஸ். ஹமீட், இக்கருத்தரங்கில் வளவாளராகக் கலந்து கொண்டார்.

இடைக்கால அறிக்கைக்கு மேலதிகமாக, மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமை குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு வளவாளர் ஹமீட் தெளிவூட்டினார்.

இக்கருத்தரங்கில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில், கருத்தரங்கின் வளவாளரை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினர் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தனர்.

இலங்கையில் ஊடகவியலாளர் அமைப்பொன்று தமது அங்கத்தவர்களுக்காக, புதிய  அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் முழுநாள் கருத்தரங்கினை முதன்முதலாக நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்