கழிவுத் தேயிலைத் தூள் 7500 கிலோ கிராமுடன் இருவர் கைது

🕔 October 13, 2017

– க. கிஷாந்தன் –

ழிவு தேயிலை தூள் சுமார் 7500 கிலோ கிராமுடன், ஹட்டன் டிக்கோயா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் அட்டன் – டிக்கோயா பகுதியில் வைத்து மேற்படி சந்தேக நபர்களை கைது ஹட்டன் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து டிக்கோயா பட்டல்கலை பகுதிக்கு கொண்டு செல்லும் போது பொலிஸார் கைப்பற்றினர்.

சந்தேக நபர்களை ஹட்டன் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மேற்படி இருவரையும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்